Tuesday, June 23, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 31-05-2020 - பெந்தக்கோஸ்துபெருவிழா( ஆண்டு- A)

பெந்தக்கோஸ்துபெருவிழா( ஆண்டு- A)

31-05-2020

ஞாயிற்றுக்கிழமை

 

 

பெந்தக்கோஸ்துஅனுபவம்தரும்இறங்கிவருகின்றஆன்மீகம்

(The spirituality of the Descending)

 

பந்தைமேல்நோக்கிஎறிந்தாள், கீழ்நோக்கிவிழும்எனும்நியூட்டனின்புவியீர்ப்புவிசையின்அடித்தளத்தில், அறிவியல்உலகம்சுழன்றுகொண்டிருக்கின்றது.மேலிருக்கும்ஆவியானவர்கீழ்நோக்கிநம்மீதுஇறங்கநாம்தூயஆவியாரின்ஈர்ப்புவிசையின்ஆலயமாவோம்என்னும்உண்மையைஎடுத்துசொல்வதுஇன்றுநாம்கொண்டாடும்பெந்தக்கோஸ்துபெருவிழா.யூதமதத்தில்மூன்றுவிழாக்கள்மிகவும்பிரபலமானவிழாக்களாககருதப்படுகின்றது.

 

1. பாஸ்காவிழா

2. பெந்தக்கோஸ்துதிருவிழா 

3 கூடாராத்திருவிழா

 

                இதில்  பெந்தக்கோஸ்து  திருவிழாவானதுபாஸ்காவிழாவின் 50வதுநாளில்கொண்டாடப்படுகிறது. இதுவாரங்களின்விழாவாகவும்கருதப்படுகின்றது. இந்தவிழாஇரண்டுவிதமானமுக்கியத்துவம்கொண்டதாகஇருக்கின்றது.

 

1.  வரலாற்றுமுக்கியத்துவம்

                வரலாற்றுமுக்கியத்துவம்என்பதுசீனாய்மலைஉடன்படிக்கையைநினைவுகூறுவதாகும்

 

2.  வேளாண்மைமுக்கியத்துவம் 

வேளாண்மைமுக்கியத்துவம்  என்பதுகோதுமைஅறுவடைக்குநன்றிசெலுத்துவதாகும்.  

 

விண்ணிலிருந்துமண்ணைநோக்கிஇறங்கிவந்ததூயஆவி, அப்போஸ்தலர்கள்மீதும்,  அன்னைமரியாமீதும்இறங்கிவந்து   நம்ஒவ்வொருவரும்இறங்கிவரும்ஆன்மீகத்தை

(The spirituality of the Descending) கற்றுக்கொள்ள  அழைப்புதருகிறார்.இறங்கிவரும்ஆன்மீகம்இரண்டுவிதமானமுக்கியத்துவம்கொண்டதாகஇருக்கின்றது

 

1. வாக்களிக்கப்பட்டஆன்மீகம்

 

பழையஏற்பாட்டில்யோவேல்இறைவாக்கினர்வாயிலாகநான்மாந்தர்அனைவர்மீதும், புதல்வர், புதல்வியர், பணியாளர்மற்றும்  பணிபெண்கள்  மீதும்தூயஆவியைபொழிந்தருள்வேன்  என்றுகூறியவாக்குஇன்றுநிறைவேறுகிறது. (யோவேல் 2: 28- 29 )நான்உங்களுக்குதண்ணீரால்திருமுழுக்குக்கொடுக்கிறேன்என்னைவிடவலிமைமிக்கஒருவர்வருவார், அவர்உங்களுக்குதூயஆவிஎன்னும்நெருப்பால்திருமுழுக்குக்கொடுப்பார்  எனதிருமுழுக்குயோவான்கூறியவாக்குஇன்றுநிறைவேறியது. (லூக்கா 3: 16) தூயஆவியைப்பெற்றுக்கொள்ளுங்கள், நான்உங்களுக்குதூயஆவியைஅனுப்புவேன்என்றுஇறைமகன்இயேசுகூறியஇறைவாக்கும்இன்றுநிறைவேறியது (யோவான் 14 :16 -17/ 20: 20)ஆகஇறங்கிவரும்ஆன்மீகம்ஒர்வாக்களிக்கப்பட்டஆன்மீகம்.

 

2. பிறக்கப்பட்டஆன்மீகம்

திருவிவிலியம்தூயஆவியின்மூன்றுபிறப்புகளைநமக்குஎடுத்துக்காட்டுகிறது.

 

1.        உலகபிறப்புக்குஒருபிறப்பு :தொடக்கத்தில்கடவுள்உலகைப்படைத்தபோதுதூயஆவியானவர்நீரின்மீதுஅசைந்தாடிக்கொண்டிருப்பதைநாம்பார்க்கின்றோம்.இதுஉலகபிறப்புக்குதூயஆவியின்பிறப்பாககருதப்படுகிறது. (தொடக்கநூல் 1:12)

 

2.        இயேசுவின்பிறப்புக்குஒருபிறப்பு :இயேசுஇந்தஉலகில்மனிதனாகமனுவுருவெடுக்கஅன்னைமரியாவின்மீதுதூயஆவியின்வல்லமைவெளிப்பட்டதுஇதுஇயேசுவின்பிறப்புக்குதூயஆவியின்பிறப்பாககருதப்படுகிறது. (லூக்கா 1:35)

 

3.        திருஅவையின்பிறப்புக்குஒருபிறப்பு :திருஅவைஇந்தமண்ணுலகில்பிறப்பதற்காகஇறைவன்அனுப்பியதூயஆவியானவர், அப்போஸ்தலர்கள்மீதும்அன்னைமரியாமீதும்  இறங்கிவந்தார்ஏன்இன்று   நம்ஒவ்வொருவர்மீதும்இறங்கிவந்து  இந்ததிருஅவையை  வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.இதுதிருஅவையின்பிறப்புக்குஒருபிறப்பாககருதப்படுகிறது. (தி.பணி: 2:1-11)ஆகஇறங்கிவரும்ஆன்மீகம்  ஒர்  பிறக்கப்பட்டஆன்மீகம்.    

 

 

நாம்கொண்டாடுகின்றஇந்தபெந்தக்கோஸ்துபெருவிழா(இறங்கிவருகின்றஆன்மீகம்)  இன்றுநமக்குஎத்தகையஒருஅழைப்பைகொடுக்கின்றதுஎன்பதைசிந்திப்போம்.

 

1. முன்னிலையிலிருந்துகடைநிலைக்குமாறும்ஆன்மீகம். (தாழ்ச்சி)

 

யார்பெரியவன்எனபோட்டிமனப்பான்மையோடுஇருந்தசீடர்கள், தூயஆவியானவரைபெற்றபிறகு, எல்லோரும்ஒரேநோக்கத்தோடுஒற்றுமையாகஉலகெங்கும்சென்றுநற்செய்திஅறிவித்ததைநாம்பார்க்கின்றோம். தான்என்றநிலையிலிருந்துநாம்என்றநிலைக்குஅவர்கள்இறங்கி  வந்தார்கள். நான்தான்என்றுநினைத்தசீடர்கள்  ஒரேநிலைக்கு, கிறிஸ்துஎன்னும்நிலைக்குமாறினார்கள்.  இதுஅவர்களில்தாழ்ச்சிஎன்னும்பண்பைவளர்த்தது. இறங்கிவருகின்றஆன்மீகம், தான்என்னும்அகந்தையிலிருந்துதாழ்ச்சிஎன்னும்புதுஆன்மீகத்தைகாட்டுகிறது. மரியாவின்வாழ்க்கையிலும்,  நான்ஆண்டவருடையஅடிமைஎன்று  மரியாள்தன்னைமுழுவதுமாக தாழ்ச்சிஎன்னும்  பண்போடுஅர்ப்பணித்தது  தூயஆவியார்பெற்றஅந்தத்தருணத்தில்தான். இன்றுநாமும்நான்என்றஅகந்தையோடு, நான்தான்எல்லாம்என்கிறஉணர்வோடுவாழ்கின்றபோதுஎல்லாம்அந்ததூயஆவியானவர்நம்மில்வந்தார்என்றால், நாம்தாழ்ச்சிஎன்றபண்போடுவாழ்வோம். இதுதான்இறங்கிவரும்ஆன்மீகம்காட்டும்முன்னிலையிலிருந்துகடைநிலைக்குமாறும்ஆன்மீகம்.

 

2. தன்னிலையிலிருந்துதன்னிலைஇல்லாதவருக்காகவரும்ஆன்மீகம். (சேவை)

 

இறங்கிவருகின்றஆன்மீகம்சேவைமனப்பான்மையைதூண்டிஇழுக்கின்றது.  தன்நிலையிலிருந்துதன்னிலைஇல்லாதவருக்காகஇறங்கிவரக்கூடியஒருஆன்மீகம்சேவைமனப்பான்மை. சீடர்கள்தங்களுடையநிலையிலிருந்துஉலகெங்கும்சென்றுநற்செய்திஅறிவிக்கவேண்டும், எல்லாஇடங்களுக்கும்செல்லவேண்டும்என்றஒருஉணர்வைஏற்படுத்தியஒருஆன்மீகம். கடைகோடியில்இருக்கின்றமக்களுக்கு,   அவர்கள்இருக்கின்றஇடத்திலேயேசென்றுபணிசெய்யவைக்கும்    ஒருஆன்மீகம். பரிசுத்தஆவிஇறங்கிவந்தபொழுதுஅக்கினிநாவுகள்   இறங்கிவந்தது,  இங்குநாவுஎன்பதுநற்செய்திஅறிவிப்பின்அடையாளமாகஇருக்கிறது. உலகெங்கும்சென்றுசீடர்கள்நற்செய்திஅறிவிப்பதற்குதூயஆவியேகாரணமாகஇருக்கின்றார்.இயேசுவைஅறிந்தவனாகஇருக்கின்றேன், நான்இன்னும்இயேசுவைஅறியாதவர்களுக்கு, அந்தஇயேசுவைகொடுப்பதற்காக  இறங்கிவருகின்றஆன்மீகம், தன்னிலையிலிருந்துதன்னிலைஇல்லாதவருக்கானஆன்மீகம். சேவைமனப்பான்மைஎன்னும்நற்செய்திஅறிவிப்புமனப்பான்மையை     தூண்டுகின்றஒருஆன்மீகம்.  அதனால்தான்அன்னைமரியாள்தூயஆவியைப்பெற்றபிறகுவயதானஒருதாய்கருவுற்றிருக்கிறாள்அவருக்குநான்உதவவேண்டும்என்றுஎலிசபெத்தைநோக்கிசென்றாள். அந்தநிலைதன்னிலையிலிருந்துதன்னிலைஇல்லாதவருக்காகவரும்ஆன்மீகம்.

 

3. தகுதியற்றநிலையிலிருந்துதகுதியுள்ளநிலைக்கானஆன்மீகம். (புதுவாழ்வு)

 

      இறங்கிவரும்ஆன்மீகம்தகுதியற்றநிலையிலிருந்துதகுதியுள்ளநிலைக்குநம்மைஅழைத்துச்செல்லுகின்றஆன்மீகமாகஇருக்கின்றது. இதுபுதுவாழ்வைநமக்குதருகின்றது. எசேக்கியல்புத்தகத்திலேயேஉலர்ந்தஎலும்புகள்தூயஆவியானவரால்புதுவாழ்வுபெற்றதைப்போல, கலக்கத்தால், அச்சத்தால்மற்றும்பயத்தால்இருந்தசீடர்கள்,  தூயஆவியானவரைபெற்றபிறகுபுதுவாழ்வுபெற்றதைநாம்பார்க்கின்றோம். தூயஆவியானவர்அவர்களுடைய   அச்சத்திலிருந்துபுதுவாழ்வுதருவதைநாம்பார்க்கின்றோம். தகுதியற்றநிலையானபாவம், கலக்கம்  மற்றும்அச்சம்இவைநீக்கப்பட்டுதகுதியுள்ளநிலையானஇயேசுவின்சீடரின்நிலையானநம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சிஎனும்புதுவாழ்வைஇவர்கள்பெற்றதைநாம்பார்க்கின்றோம். இதைத்தான்யோவான்நற்செய்தி 16 :18-ல்எதுசரியானதுஎன்பதைகாட்டுகின்றவராகதூயஆவிஇருக்கின்றார்எனபார்க்கின்றோம். அன்னைமரியாளும்இறைவனின்தாய்என்றபுதுவாழ்வை, மீட்பின்திட்டத்தில்பங்குகொள்கின்றபுதுவாழ்வை  தூயஆவியாரின்அருளாலேபெற்றார்.    நம்முடையதகுதியற்றஅந்தபாவநிலையிலிருந்து, பழையநிலையிலிருந்துதகுதியுள்ளபுதியநிலைக்குமாறநாம்தூயஆவியைப்பெற்றுக்கொள்வோம்.

 

மரங்களில்இருக்கின்றபழங்கள், மரங்களிலேஇருந்தால், அதுஒருபலனும்கிடையாது. அதுநம்முடையகரங்களுக்குஇறங்கிவருகின்றபொழுதுதான்நம்முடைய  நாவுக்குசுவைஉடையதாகஇருக்கின்றது.   இறங்கிவருகின்றஆன்மீகத்தில், தூயஆவியானவர்நம்மில்இறங்கிவருகின்றபொழுதுதான்நம்முடையவாழ்க்கை   சுவைபெறும்.இன்றுநாம்சுயநலத்தோடு, அகந்தையோடு, பொறாமையோடுமற்றும்பாவவாழ்க்கையோடுவாழுகின்றநிலையிலிருந்துஇறங்கிவர, இறங்கிவரும்ஆன்மீகம்நம்முடையவாழ்க்கையாகமாறவேண்டும். அதற்குதூயஆவியானவர்நம்முள்  குடிகொள்ளவேண்டும். நம்வாழ்வுதூயஆவியானவர்நிறைந்தவாழ்வாகமாறஇறையருளைவேண்டிபக்தியாய்மன்றாடுவோம்.  இறைவன்நம்ஒவ்வொருவரையும்ஆசீர்வதிப்பார்

 

 

Fr. குழந்தையேசுராஜன் CMF

கும்பகோணம்.


 

No comments: