Saturday, October 17, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -18-10-2020 - பொதுக்காலம் 29ஆம் வாரம் ( ஆண்டு- A)

விவேகம், ஞானம் என்னும் இரு கண்கள் 



ஒவ்வொரு நாளும் தன்னுடைய குடும்ப பிரச்சனையால் வாழ்க்கையை வெறுத்த மனிதன் ஒருவன் எங்கேயாவது சென்று துறவியாகி விடலாம் என்று முடிவெடுத்தான். அதன்பின் அவன் ஒருநாள் மாலை வேளையில் தன்னுடைய குடும்பத்தை விட்டு நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டான்காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது சற்றே பயந்துநான் இனிமேல் பயணிக்க இயலாது என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து    யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக கொள்ளையர்கள்  சிலர் அருகே உள்ள கிராமத்தில் அனைத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்தவர்களை குத்தி கொன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து பயந்த இவன், கதி கலங்கிப் போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அந்த கொள்ளைக் கூட்டத்தினர் அவனைப் பார்த்து, யார் நீ? என்று கேட்டார்கள்அவனோ பயத்தை காட்டாது சற்று யோசித்து அவர்களிடம் நேற்று மாலை தான் நான் இறந்தேன்இங்கு தான் என்னை புதைத்தார்கள் உள்ளே ஒரே புழுக்கமாக இருக்கிறது அதனால் சற்று இளைப்பாறலாம் என்று மரத்தின் அருகில் உட்கார்ந்தேன் என்று கூறினான். அவ்வளவுதான்  திருடர்கள் அனைவரும்  பொருட்களை விட்டு விட்டு, பேய் என்று பயந்து ஓடி விட்டார்களாம்இது அந்த மனிதனின் ஞானத்தையும் விவேகத்தையும் நமக்கு காட்டுகிறது.


            ஆம் அன்பார்ந்தவர்களே, இன்றைய இறைவார்த்தையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் விவேகம் மற்றும் ஞானம் என்னும் இரண்டு கண்களோடு வாழ  அழைப்பு தருகிறது.   இன்றைய நற்செய்தியில் சீசருக்கு வரி செலுத்துவது முறையா? என இயேசுவை நோக்கி கேட்கப்படுகின்றது.   இது பரிசேயர்கள் இயேசுவை பேச்சில் சிக்க வைக்கலாம் என்று சூழ்ச்சி செய்கின்ற சதித்திட்டம். சீசருக்கு வரி கொடுங்கள் என்று இயேசு கூறினால்மக்கள் எப்படியும் கோபம் அடைவார்கள், அவர்களே இந்த இயேசுவை கொன்று போடுவார்கள் என்று நினைத்தார்கள். வரி கொடுக்க வேண்டாம் என்று இயேசு கூறினால்  "இவன் உரோமை அரசுக்கு எதிராக நடக்கின்றான்இவனை அரசிடம் ஒப்படைத்து விடலாம்" என்று அவர்கள்  ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். ஆனால் இயேசுவோ விவேகத்தோடு ஞானத்தோடு "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள்" என்கின்றார். இது இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய ஞானத்தையும் விவேகத்தையும் நமக்கு எடுத்துக்கூறுகிறதுஇயேசுகிறிஸ்து தன்னிலே விவேகத்தையும் ஞானத்தையும் இரு கண்களாக கொண்டதை நாம் பார்க்கின்றோம். ஒவ்வொரு முறையும் பரிசேயர்களும் சதுசேயர்களும் இவரை சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணிய போதெல்லாம் இயேசு இந்த இரு கண்களை பயன்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

யோவான். 8:1 -11 -ல் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கொண்டு வருகின்றார்கள். அவள் மீது மோயிசனின் சட்டப்படி கல்லெறிய வேண்டும் என்று அவர்கள் இயேசுவிடம் குறிப்பிடுகின்றார்கள். இதுவும் ஒரு சூழ்ச்சி  தான்.
கல் எறியுங்கள் என்றால் இவன் இரக்கமற்றவன்அன்பில்லாதவன் என்று கூறுவார்கள். கல் எறியாதீர்கள் என்றால் இவன் மோயிசனுடைய சட்டத்திற்கு எதிராக நடக்கின்றான் என்று கூறுவார்கள். ஆக அவர்கள் இவரை பேச்சில் சிக்க வைக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் இயேசுவோ விவேகத்தோடு ஞானத்தோடு இங்கு நடந்து கொள்வதைப் பார்க்கின்றோம். “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்என்று அவர்களிடம் கூறினார்.

 
         மத்தேயு 19: 1-13-ல் மணமுறிவு கொடுக்கலாமா? என்று  ஒரு கேள்வியைக் கேட்கின்றார்கள். மனமுறிவு கொடுக்கலாம் என்று இயேசு கூறினார் என்றால் பாவிகள் மீது இவருக்கு இரக்கமே இல்லை என்று கூறுவார்கள். மணமுறிவு கொடுக்கக் கூடாது என்றால் மோசேயின் சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்றார் என்று கூறுவார்கள். மீண்டுமாக இயேசுவை சிக்க வைக்க வேண்டும் என்று   இறந்து உயிர்த்தெழும் பொழுது ஏழு பேரை  கணவனாக கொண்ட மனைவி  யாருக்கு கணவனாக  இருப்பாள் என்று அடுத்த கேள்வியை கேட்கின்றார். இயேசு அங்கும் விவேகத்தோடு ஞானத்தோடு "விண்ணகத் தூதரை போல அவர்கள் இருப்பார்கள்" என்று பதில் கூறுகிறார்.

 

 மாற்கு. 2:1-5-ல் முடக்குவாதமுற்றவனை அவர் குணமாக்கும் பொழுது, பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் இவருக்கு எப்படி வந்தது? என்று கேட்கின்றார்கள். யோவான் 5:5-9 -ல் 38 ஆண்டுகளாக நோயினால் அவதியுற்ற ஒருவரை ஓய்வு நாளில் இயேசு குணமாக்கிய போது ஓய்வு நாளில் இவர் எப்படி குணமாக்க முடியும்? என்று கேட்கின்றார்கள்.
இவ்வாறு பல்வேறு இடங்களில் இயேசுவின் மீது வீண் பழி சுமத்த வேண்டும். அவரை சூழ்ச்சியில் சிக்க வைக்க வேண்டும் என்று பரிசேயர்களும் சதுசேயர்களும் சதித்திட்டம்  தீட்டிய போதெல்லாம் இயேசு விவேகம், ஞானம் என்னும் இரு கண்களோடு பேசுவதை நாம் பார்க்கின்றோம்ஞானமும் விவேகமும் நம்முடைய வாழ்க்கையிலும் வளர வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில் சைரஸ் அசீரிய அரசன், யூதன் அல்லாதவன், இந்த நாடு யூதருக்கு தீங்கு இழைப்பதை உணர்ந்து, அவர்களுடைய நிலங்களை மீட்டு, அங்கு  ஆலயம் கட்ட அனுமதி அளித்தது அவனது விவேகத்தையும், ஞானத்தையும் தன்னுடைய வாழ்க்கையில் பயன்படுத்தி இறைவனுடைய திட்டத்தை உணர்ந்ததை நமக்கு வெளிப்படுத்துகிறது.

இன்று, நமக்கு தெரிந்தவர்கள், நம்மோடு இருப்பவர்கள் நம்மை சூழ்ச்சி என்னும் வலையில் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். நாம்  நம்முடைய ஞானத்தையும், விவேகத்தையும் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வின் சவால்களில் இருந்து  மீண்டு எழ முடியும்.
எனவே சாலமோன் இறைவனிடம் ஞானம் பெற்றதைத் போல  நாமும் வாழ்வின் சாவால்களையும் சூழ்ச்சிகளையும் எதிர் கொள்ள இறையருளை வேண்டுவோஇறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.