காணிக்கைப் பாடல்
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF
Singer:- Barbara Stefy
Listen (Song):- https://youtu.be/NKp1EXTZLWw
Karoke:- https://youtu.be/mWO2hQrtMnM

எம்மை உமக்கு தந்தேன்
படைப்பின் பொருளை பலியில் பரிசாய்
தந்தேன் என் இறைவா -2
உள்ளத்தை தந்தேன்
(உம்மில் வந்தேன்-2)
உள்ளத்தை தந்தேன் -2
உள்ளதை தந்தேன் உள்ளத்தை கேட்டாய்
மலரை தந்தேன் மனதை கேட்டாய்
பலியில் தந்தேன் பகிர்வை கேட்டாய்
எல்லாம் தந்தேன் என்னை கேட்டாய் -2
உள்ளத்தை…
உறவில் மலர உலகை படைத்தாய்
மீட்பை அளிக்க மரணம் ஏற்றாய்
உன்னெழில் பாதை எம்மில் இணைய
வெண்ணிற அப்பமாய் எம்மில் வந்தாய் -2
உள்ளத்தை…
தியானப் பாடல்
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF
Singer:- Krithika Babu
Listen (Song):- https://youtu.be/MTIC8kNAltI
இறைவா என்னைத் தேர்ந்தாய்
கருவில் என்னைச் சுமந்தாய் - எந்தன்
பெயரைச் சொல்லி அழைத்தாய்
கண்ணின் மணிபோல் காத்தாய் - 2
உனது பயணம் தொடர
சம்மதமே இறைவா
உனது அன்புக் கரத்தில்
வாழ்வு வளரும் நிறைவாய்-2
உறவிலே உருகிட
உறைந்திட்டேன் ஒளிர்ந்திட்டேன் -இறைவா...
1
சின்ன சிறிய இதயம் திறந்து
உந்தன் உறவில் இணையவே
எந்தன் உள்ளம் ஏங்குதே
கூட்டை தேடும் பறவை போல
உந்தன் சந்நிதி சேரவே
எந்தன் மனதில் தாகமே -2
மண்ணில் மடிந்து உம்மில் மலர
இந்த விதையும் விரும்புதே -2 -உனது பயணம்....
2
உள்ளம் திறந்து உன்முன் அமர்ந்து
உன்னுடன் என்றும் பேசவே
எந்தன் உணர்வுகள் உருகுதே
கண்ணீர் சிந்தும் கண்களில் உந்தன்
அழைப்பின் குரலைக் கேட்கவே
எந்தன் செவிகள் திறந்ததே -2
உந்தன் நெருப்பில் உருகி ஒளிர
இந்த மெழுகும் ஏங்குதே -உனது பயணம்...வருகைப் பாடல்
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF
Singer:- Fr. T. Ansel Antony CMF
Listen (Song):- https://youtu.be/W7BBAc4lEw4
இறைவனின் வார்த்தையிலே
இயேசுவின் வாழ்விலே
கலந்திட வாருமே
கோதுமை அப்பத்திலே
திராட்சை இரசத்திலே
பகிர்ந்திட வாருமே – 2
இதயங்கள் மலர
இறையருள் வளர
இறையுறவில் இணைந்திடுவோம்
நிறைவாழ்வில் நிலைத்திடுவோம்
1
ஆயனின் மேய்ச்சலில்
பிழைதனை தயைசெய்து
இறைச்சிறு மந்தையில்
ஒன்றித்து வாழ்ந்திட -2
நீதியில் திளைத்திட
ஒளியினில் நடந்திட
அன்பினில் மலர்ந்திட
அருள் ஒளி பெற்றிட
பலியினில் இணைந்திட
இறைமகன் அழைக்கின்றார்
-இதயங்கள்…
2
அருள்தரும் இறைவாக்கு
தினம் தினம் நிறைவாழ்வு
அன்புத் தரும் நல்லுறவு
குறைத்தீர்க்கும் மறைவாக்கு – 2
மீட்பளிக்கும் மகிழ்வு
உயிரளிக்கும் அன்பு
வாழ்வளிக்கும் உறவு
குணமளிக்கும் மருந்து
பலியினில் இணைந்திட
இறைமகன் அழைக்கின்றார்
-இதயங்கள்…
சிலுவைப்பாதை பாடல்
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF
Singer:- S.P. Sundar
Listen (Song):- https://youtu.be/PyJZYeIIOok
கல்வாரி காயங்கள் காவியமாய்- எம்
கறைகளை கரைத்திட கையளித்தீர்-2
சாவின் இறுதிக்கு தீர்ப்பளித்து
மன்னன் பிலாத்து சான்றுரைத்தான் -2
விரும்பி ஏற்கும் சிலுவையோ
அன்பின் பகிர்வின் அடையாளம் -2
பாரம் தாங்கா சிலுவைதனை
பாதை தன்னில் சாய்த்தாரே -2
சோர்ந்து போகும் வேளையிலே
ஆற்றல் தருவாள் அன்னையவள் -2
உறவின் கரங்கள் ஆயிரம்
உதவும் கரமாய் சீமோனோ-2
சிதைந்த முகத்தின் உருவத்தினை
துணியில் பதித்தது வீரமகள் -2
சிந்தை சிதைந்த இயேசுவோ
வெந்த தரையில் சாய்ந்தாரே-2
விழியில் ஈரம் உலர்ந்திடவே
இதய ஈரம் நிலைத்திடவே -2
தேடி அலைந்து ஓடிய
கால்கள் இடறி விழுந்ததோ -2
பசியும் உறவும் உடையுமே
என்றும் இழக்க நேர்வதில்லை -2
மீட்பின் சின்னமாய் சிலுவையிலே
ஆணிகள் கரங்களில் பாய்ந்ததுவே -2
ஆவி பிரியும் முன்னரே
கூவி அழைத்து ஒப்படைத்தார் -2
விடியலின் சின்னமாய் மாண்டாரே
மரியின் மடியில் மலர்ந்தாரே -2
மீண்டும் உயிருடன் எழுந்திடவே
புதைந்த கல்லறை மூடியதோ -2


