Monday, January 5, 2026

திருவழிப்பாட்டு பாடல்கள் | திருப்பலிப் பாடல்கள்

காணிக்கைப் பாடல்

Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Barbara Stefy

Listen (Song):- https://youtu.be/NKp1EXTZLWw 

Karoke:- https://youtu.be/mWO2hQrtMnM


எந்தன் உள்ளம் உம்மில் இணைய
எம்மை உமக்கு  தந்தேன்

படைப்பின் பொருளை பலியில் பரிசாய் 

தந்தேன் என் இறைவா -2


உள்ளத்தை தந்தேன் 

(உம்மில் வந்தேன்-2) 

உள்ளத்தை  தந்தேன் -2

1
உள்ளதை தந்தேன் உள்ளத்தை கேட்டாய்

மலரை தந்தேன் மனதை கேட்டாய் 

பலியில் தந்தேன் பகிர்வை கேட்டாய்

எல்லாம் தந்தேன் என்னை கேட்டாய் -2

                                      உள்ளத்தை…

2
உறவில் மலர உலகை படைத்தாய்

மீட்பை அளிக்க மரணம்  ஏற்றாய் 

உன்னெழில் பாதை எம்மில் இணைய 

வெண்ணிற அப்பமாய் எம்மில் வந்தாய் -2

                                      உள்ளத்தை…



தியானப் பாடல்


Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Krithika Babu


Listen (Song):- https://youtu.be/MTIC8kNAltI 











இறைவா என்னைத் தேர்ந்தாய்  

கருவில் என்னைச் சுமந்தாய் - எந்தன் 

பெயரைச் சொல்லி அழைத்தாய் 

கண்ணின் மணிபோல் காத்தாய் - 2  

 

உனது பயணம் தொடர 

சம்மதமே இறைவா 

உனது அன்புக் கரத்தில்  

வாழ்வு வளரும் நிறைவாய்-2

உறவிலே உருகிட  

உறைந்திட்டேன் ஒளிர்ந்திட்டேன் -இறைவா... 


                            1

சின்ன சிறிய இதயம் திறந்து 

உந்தன் உறவில் இணையவே 

எந்தன் உள்ளம் ஏங்குதே 

கூட்டை தேடும் பறவை போல 

உந்தன் சந்நிதி சேரவே 

எந்தன் மனதில் தாகமே -2

மண்ணில் மடிந்து உம்மில் மலர 

இந்த விதையும் விரும்புதே -2   -உனது பயணம்.... 


                             2 

உள்ளம் திறந்து உன்முன் அமர்ந்து 

உன்னுடன் என்றும் பேசவே 

எந்தன் உணர்வுகள் உருகுதே 

கண்ணீர் சிந்தும் கண்களில் உந்தன்

அழைப்பின் குரலைக் கேட்கவே

எந்தன் செவிகள் திறந்ததே -2

உந்தன் நெருப்பில் உருகி ஒளிர 

இந்த மெழுகும் ஏங்குதே      -உனது பயணம்...

வருகைப் பாடல்

 
Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF

Singer:- Fr. T. Ansel Antony CMF 


Listen (Song):- https://youtu.be/W7BBAc4lEw4













இறைவனின் வார்த்தையிலே

இயேசுவின் வாழ்விலே

கலந்திட வாருமே

கோதுமை அப்பத்திலே

திராட்சை இரசத்திலே

பகிர்ந்திட வாருமே – 2


இதயங்கள் மலர

இறையருள் வளர

இறையுறவில் இணைந்திடுவோம்

நிறைவாழ்வில் நிலைத்திடுவோம்


                  1

ஆயனின் மேய்ச்சலில் 

பிழைதனை தயைசெய்து

இறைச்சிறு மந்தையில் 

ஒன்றித்து வாழ்ந்திட -2


நீதியில் திளைத்திட 

ஒளியினில் நடந்திட

அன்பினில் மலர்ந்திட

அருள் ஒளி பெற்றிட

பலியினில் இணைந்திட

இறைமகன் அழைக்கின்றார்

                                           -இதயங்கள்…

                    2

அருள்தரும் இறைவாக்கு 

தினம் தினம் நிறைவாழ்வு

அன்புத் தரும் நல்லுறவு

குறைத்தீர்க்கும் மறைவாக்கு  – 2


மீட்பளிக்கும் மகிழ்வு 

உயிரளிக்கும் அன்பு

வாழ்வளிக்கும் உறவு

குணமளிக்கும் மருந்து

பலியினில் இணைந்திட

இறைமகன் அழைக்கின்றார்

                                     -இதயங்கள்…


சிலுவைப்பாதை பாடல்

Lyrics & Tune:- Fr. A. Kulandai Yesu Rajan CMF


Singer:- S.P. Sundar 


Listen (Song):- https://youtu.be/PyJZYeIIOok













கல்வாரி காயங்கள் காவியமாய்- எம் 

கறைகளை கரைத்திட கையளித்தீர்-2


 சாவின் இறுதிக்கு தீர்ப்பளித்து

 மன்னன் பிலாத்து சான்றுரைத்தான்  -2


விரும்பி ஏற்கும் சிலுவையோ 

அன்பின் பகிர்வின் அடையாளம் -2


பாரம் தாங்கா    சிலுவைதனை

பாதை தன்னில் சாய்த்தாரே -2


சோர்ந்து போகும் வேளையிலே

ஆற்றல் தருவாள் அன்னையவள்  -2


உறவின் கரங்கள் ஆயிரம்

 உதவும் கரமாய் சீமோனோ-2


 சிதைந்த முகத்தின் உருவத்தினை 

துணியில் பதித்தது வீரமகள் -2


சிந்தை சிதைந்த இயேசுவோ 

வெந்த தரையில் சாய்ந்தாரே-2


விழியில் ஈரம் உலர்ந்திடவே

 இதய ஈரம் நிலைத்திடவே -2


தேடி அலைந்து ஓடிய

 கால்கள் இடறி விழுந்ததோ -2


பசியும் உறவும் உடையுமே 

என்றும் இழக்க நேர்வதில்லை -2


மீட்பின் சின்னமாய் சிலுவையிலே 

ஆணிகள் கரங்களில் பாய்ந்ததுவே  -2


ஆவி பிரியும் முன்னரே 

கூவி அழைத்து ஒப்படைத்தார் -2


விடியலின் சின்னமாய் மாண்டாரே

மரியின் மடியில் மலர்ந்தாரே -2


 மீண்டும் உயிருடன் எழுந்திடவே

புதைந்த கல்லறை மூடியதோ -2



No comments: