🌱விவிலிய விதைகள்🌱
தவக்காலம் 3-ஆம் வாரம் ( ஆண்டு- B)
07-03-2021
ஞாயிற்றுக்கிழமை
நம் வாழ்வின் ஆலயங்கள்
இறப்பைப் பற்றி நடத்திய ஆய்வு ஒன்று இவ்வாறு சொல்லுகிறது. இன்று மக்களில் 20 சதவீதத்தினர் விபத்துக்களால் இறக்கின்றனர். 17 சதவீதத்தினர் வீடுகளில் இறக்கின்றனர். 16 சதவீதத்தினர் வாகனங்களில் பயணிக்கின்ற போது இறக்கின்றனர். 32 சதவீதத்தினர் மருத்துவமனைகளில் நோய்களால் இறக்கின்றனர். .001 சதவீதத்தினர் மட்டுமே ஆலயங்களில் வழிபாட்டு நேரங்களில் இறக்கின்றனர். .001 சதவீதத்தினர் என்பது ஒன்றும் இல்லை என்று தான் அர்த்தம். ஆக ஆலயங்கலே பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது.
கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இன்றைய இறைவார்த்தை வழிபாடு ஆலயத்தின் தூய்மையை பற்றியும், ஆலயத்தைப் பற்றிய நமது புரிதலை தியானிக்கவும் அழைப்புக் தருகின்றது.
இன்றைய இறைவாக்கு வழிபாடு ஆலயங்களைப் பற்றிய
மூன்று சிந்தனைகளை நம்முன் வைக்கின்றது.
1. ஆலயங்களின் புனிதத்தன்மை.
2. கிறிஸ்து
என்னும் ஆலயம்.
3 .இறைவன்
குடி கொள்ளும் தூய ஆவியின் ஆலயம்.
1. ஆலயங்களின் புனிதத்தன்மை.
ஆலயம்
என்பது இறைவன் குடி கொள்ளும் இடம், இது ஜெபத்தின் வீடு, இதை நாம் உணர வேண்டும்.
இறைவனுடைய பிரசன்னம் நிறைந்திருக்கின்ற இந்த இடத்தை நாம் எந்த அளவுக்கு நமது
வாழ்க்கையில்
உணர்கின்றோம்.
இறைவனது ஆலயம் தூய்மையானது, புனிதத்தன்மை நிறைந்தது என்பதை உணர்கின்றோமா? என
சிந்தித்து பார்க்க அழைப்பு தருகின்றது இன்றைய இறைவார்த்தை. “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என்
தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” (யோவான்
2:16) என்னும்
இயேசுவின் வார்த்தைகள் இறைவன் வழியாக ஆலயம் தூய்மையானது, அது வணிகத் தளம் அல்ல
என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம், நமது வாழ்க்கையில்
இறைவனுடைய இந்த ஆலயத்துக்கு, இறைவனுடைய புனித மற்றும் தூய்மையான இடத்திற்கு எந்த
அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
2. கிறிஸ்து
என்னும் ஆலயம்
இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்துவே இறைவனின் மறையுடல் என்னும் ஆலயம் என்பது எடுத்துரைக்கப்படுகின்றது. “இக்கோவிலை
இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி
எழுப்புவேன்” (யோவான் 2:19) எனும் வார்த்தைகள் இயேசுவே
கிறிஸ்தவத்தின் புதிய ஆலயமாகத் இருக்கின்றார் என்றும், இவர் இந்த ஆலயத்தை தன்னுடைய
பாடுகள் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக கட்டினார் என்பதையும்
எடுத்துரைக்கின்றன. இயேசு நற்செய்தியில் ஆலயத்தை தூய்மை செய்வது, ஆலயத்தின் புனிதத்தன்மையையும்
மற்றும் தூய்மையையும் எடுத்துரைக்கின்றது. இந்த
இயேசுவே இறைவனை நாம் சந்திக்கின்ற இடமாக
மாறுகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கால்நடைகளை ஆலயத்தை விட்டு இயேசு
வெளியேற்றுவது இயேசுவே புதிய ஆலயமாக இருக்கின்றார், இந்த புதிய ஆலயத்தில் இனி
கால்நடை பலி மற்றும் காணிக்கை தேவையில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு
ஒவ்வொரு முறையும் தந்தையை வெளிப்படுத்துபவராக இருக்கின்றார். "தந்தை
என்னுள்ளும்
இருக்கின்றார், நான் தந்தையுள்ளும் இருக்கின்றேன்" என்று
தந்தையை வெளிப்படுத்துகின்றார். இயேசுவே
நாம்
தந்தையை சந்திக்கும், அறிந்துகொள்ளும் புதிய ஆலயமாக, இடமாக மாறுகின்றார். இந்த
இயேசுவே இறைவனை சந்திக்கும் ஆலயம், நம் வாழ்வின் ஆலயம் என்பதை நாம் உணர்ந்து, இந்த
இயேசுவின் வழியாக இறைவனை சந்திக்கின்றோமா? என சிந்திப்போம். இயேசுவில்
தான் நாம் இறைவனுடைய மீட்பையும் பிரசன்னத்தையும் பார்க்கின்றோம். எனவே, இயேசுவில்
நாம் இறைவனைக் கண்டு அவர் தரிசனத்தை உணர்வோம்.
3 .இறைவன்
குடி கொள்ளும் தூய ஆவியின் ஆலயம்.
"நீங்கள்
கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும்
உங்களுக்குத் தெரியாதா?" (1 கொரிந்தியர் 3:16)
என்னும்
பவுல் அடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் ஆலயங்களாக
இருக்கின்றோம், நாம் இறைவனால் படைக்கப்பட்டு, அவருடைய பிரசன்னத்தால், அவருடைய
சாயலால் நிறைந்திருக்கின்றோம். நம்மில் இறைவன் இருக்கின்றார், என்னுடைய சகோதர சகோதரிகளிடத்தில் இறைவன் இருக்கின்றார் என்பதை
உணர இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது. கிறிஸ்து என்னும் ஆலயம்
இப்பொழுது கிறிஸ்தவ சமுதாயத்திற்கு மாற்றப்படுகின்றது.
கிறிஸ்து
என்னும் இந்த ஆலயம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடத்திலும் வெளிப்படுவதாக அமைகின்றது. நாம்
ஒவ்வொருவரும் இறைவனின் ஆலயங்களாக இருக்கின்றோம் என்பதை
இன்றைய நாளில்
உணர்வோம்.
இறைவனின் சாயலில் அவருடைய பிரசன்னம் என்னுடைய சகோதர சகோதரிகளிடத்தில், என்னை
சுற்றி வாழ்கின்ற ஒவ்வொருவரிடத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து யாவரையும்
மதித்து, அன்பு செய்து வாழ்வோம். நாம் இறைவனின் ஆலயங்கள் என்பதை உணர்வோம். நம் ஊர்களில் நம் மத்தியில் இருக்கின்ற
இறைவன் குடி கொள்ளுகின்ற ஆலயங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இறைவனின் ஆலயம்
தூய்மையானது புனிதம் மிக்கது என்பதை நாம் உணர்கின்றோமா? இன்று மக்கள் ஆலயத்திற்கு
செல்லுகின்ற விதங்களை ஆலயத்திலே அவர்கள் இருக்கின்ற விதங்களை வைத்து ஐந்து வகையான
ஆலயங்களை எடுத்துரைக்கின்றார்கள்.
1. பூங்கா
ஆலயம்: பலர் நம்மில் ஆலயத்திற்கு செல்லும் விதம்
ஏதோ பூங்காவிற்கு நண்பர்களை, காதலன், காதலியை பார்க்க செல்வதைப் போல தான்
இருக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவிழா
நாட்களிலே ஆலயத்திற்கு செல்வது, சில உறவுகளையும், நண்பர்களையும் சந்திப்பதற்காக மட்டும்
என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், இப்படிபட்டவர்கள் பூங்கா ஆலயத்திற்கு
தான் செல்கிறார்கள்.
2. அருங்காட்சியகம் ஆலயம்:
பலருக்கு ஆலயம் செல்வது ஏதோ ஒரு அருங்காட்சியகத்துக்கு செல்வதைப்போல ஆலயத்திற்கு
சென்று ஆலயத்தின் அழகை, அது கட்டப்பட்டு இருக்கின்ற விதத்தை, அதிலே உள்ள அழகிய
படங்களை, சுருபங்களை பார்ப்பதற்காக மட்டுமே செல்பவர்கள். ஏதோ
அருங்காட்சியகத்திற்கு சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வருவதைப்போல ஆலயத்திற்கு
சென்று வருவார்கள். இத்தகைய மனிதர்களை அருங்காட்சியக ஆலயம் செல்லுகின்ற மனிதர்கள்
என்று சொல்வார்கள்.
3. பெட்ரோல்
பங்க் ஆலயம்: இன்று நாம் பெட்ரோல் பங்கிற்கு செல்வது
பெட்ரோலை வாகனத்திற்கு நிரப்புவதற்காக, அதனை கடந்து அங்கு வேறு எந்த வேலையும்
கிடையாது. ஆலயத்துக்கு வருவதும் சிலருக்கு நற்கருணையை பெறுவதற்காக தான். இத்தகையோரை பெட்ரோல்
பங்க் ஆலயத்திற்கு வருபவர்கள் எனலாம்.
4. குளிர்சாதனப்பெட்டி
ஆலயம்: சிலர் ஆலயத்திற்கு வருவது, ஒரு கிறிஸ்தவன்
என்னும் கடமையை நிறைவேற்றுவதற்காக. உள்ளுக்குள் எந்தவிதமான
பக்தியும் இல்லாத நிலை. ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற
கடமைக்காக வருபவர்கள். குளிர்சாதன பெட்டியில்
எதுவும் கெட்டுப் போகக் கூடாது என்று கடமைக்கு வைப்பதை போல கடமைக்கு ஆலயத்திற்கு
வருபவர்கள் இத்தகையோர்.
5. சீடத்துவ ஆலயம்: இவை அனைத்தையும் கடந்து சீடத்துவ ஆலயம் என்று சொல்லுகின்ற போது, அது இறைவனை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வோடு மட்டுமே ஆலயத்திற்கு வருபவர்கள். இத்தகையோர் ஆலயத்தின் புனித தன்மையை அறிந்து இருப்பவர்கள். அவர்கள் ஆலயம் தூய்மையானது, இறைவன் பிரசன்னம் நிறைந்த இடம் என்பதை உணர்பவர்கள்.
அன்பார்ந்தவர்களே, நாம் எத்தகைய ஆலயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றோம்? ஆலயத்தை பற்றிய நமது புரிதல்கள் எந்த வகையைச் சார்ந்ததாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை இறைவனின் ஆலயத்தின் புனிதத் தன்மையை உணர்ந்து, இறைவனின் பிரசன்னம் நிறைந்த இடம் என்பதை வாழ்க்கையில் அறிந்து வாழ அழைப்பு தருகிறது. நமக்கு கிறிஸ்துவே ஆலயமாக இருக்கின்றார், அந்த ஆலயத்தை வெளிப்படுத்துகின்ற தூய ஆவியின் ஆலயங்கள் நாம் ஒவ்வொருவரும் என்பதை உணர்ந்து வாழ்வோம் இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.
அருட்பணி.
குழந்தை
யேசு
ராஜன்
CMF
கும்பகோணம்
Lent| The Path of Conversion | தவக் காலம் - மனமாற்றத்தின் பாதை #16 | Fr. A. Kulandai Yesu Rajan CMF
--https://www.youtube.com/watch?v=Z1vU5AKFvC0