🌱விவிலிய விதைகள்🌱
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
இயேசுவின் உயிர்ப்பு காட்டும்
வெளிப்பாடுகள்
"உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார்,
இந்த உலகையே உயிர்த்து விட்டார்,
வென்றார் கிறிஸ்து வென்றார்,
இந்த
அகிலத்தை வென்று விட்டார்,
ஆர்ப்பரிப்போமே... அல்லேலூயா,
ஆனந்திப்போமே... அல்லேலூயா,
அல்லேலூயா பாடுவோம்"
எனும்
பாடல் வரிகளுக்கேற்ப ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்ப்பு பெருவிழா நம்
ஒவ்வொருவருக்கும் ஆர்ப்பரிப்பையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய விழா. இது
நாம் பயணித்த தவக்காலத்தின் உச்சகட்ட விழா. இதை
திருத்தந்தை முதலாம் சிங்கராயர் திருச்சபையின் எல்லா விழாக்களிலும் மேலான பெருவிழா
என்று
குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்களுக்கு
இது மிகப்பெரிய விழா. இது பாஸ்கா விழா, யூதர்களின்
பாரம்பரிய விழா பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய விழா, அடிமைத்தனத்திலிருந்து
விடுதலை வாழ்வுக்கு கடந்து வந்த ஒரு விழா. புதிய
ஏற்பாட்டில் இயேசு இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு கடந்து வந்த விழா. நம்முடைய
பாவங்களிலிருந்து நமக்கு மீட்பை தந்த விழா. வரலாற்றில் சாவை வென்ற ஒரு
மனிதர் என்றால் அது இறைமகன் இயேசு கிறிஸ்து தான், ஆக
இது வரலாற்றை ஊடுருவி உலுக்கிய ஒரு விழா. வரலாற்றில்
சாவை வென்ற ஒரே ஒரு மனிதர் என்றால் அது இயேசு கிறிஸ்து தான். இந்த
உலகத்தில் பல தலைவர்கள், அரசர்கள், மதத்தலைவர்கள்
என பலர் வாழ்ந்தனர், போதித்தனர், தங்களை
கடவுள் எனக் கூறினர், ஆனால் யாரும் உயிர்த்தெழவில்லை. எகிப்து
நாட்டில் பிரமிடுகளில் இறந்தவர்களின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால்
யாரும் அதில் உயிர்த்தெழவில்லை. சொன்னவாறு உயிர்த்தெழுந்த ஒரே
மனிதர் இறைமகன் இயேசு கிறிஸ்து மட்டுமே.
இயேசுவின்
உயிர்ப்பு பெருவிழா இன்று கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் நான்கு விதமான
வெளிப்பாடுகளைத் தருகிறது.
1. விசுவாசத்தின்
பிறப்பு
2. ஒவ்வொருவருக்கும்
உயிர்ப்பு
3. பாவங்களுக்கு
மீட்பு
4. சாட்சிய
வாழ்வின் அழைப்பு
1. விசுவாசத்தின்
பிறப்பு
இயேசுவினுடைய பிறப்போ அல்லது இறப்போ நமக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை அளிக்கவில்லை, மாறாக அவருடைய உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகிறது. இயேசுவின் பிறப்பு, நற்செய்தி, சிலுவை, இறப்பு மட்டுமே இருந்திருந்தால் இங்கு விசுவாசம் வளர்ந்திருக்காது மாறாக இயேசுவின் உயிர்ப்பு தான் கிறிஸ்தவ விசுவாசத்தை தருகின்றது. சீடர்கள் பயத்திலிருந்து வெளியே வந்தது, நற்செய்தியை அறிவித்தது இயேசுவினுடைய உயிர்ப்பால், எனவே இன்று நாம் நம் விசுவாசத்தை புதுப்பிக்க அழைக்கப்படுகின்றோம். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"( ( 1கொரிந்தியர் 15:14) எனும் பவுலடிகளாரின் வார்த்தைக்கெற்ப இயேசுவின் உயிர்ப்பு நம் விசுவாசத்தின் பிறப்பு.
இயேசுவினுடைய
உயிர்ப்புக்கு இரண்டு அடையாளங்களை எடுத்துக் கூறலாம், அதுவே
விசுவாசத்தின் வித்துகளாக மாறுகிறது.
A. காலி
கல்லறை
"வாரத்தின்
முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச்
சென்றார்;
கல்லறை
வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்"யோவான். 20:1
எனும்
இறைவார்த்தைகள் காலியான கல்லறை இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக் காட்டுகின்ற முதல்
அடையாளம் என்பதை காட்டுகின்றது.
B. துணிகள்
பேதுருவும்
இயேசுவினுடைய அன்புச் சீடரும் கல்லறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது கல்லறையில்
சுருட்டி கிடந்த துணிகள், இயேசுவினுடைய உயிர்ப்பை சுட்டிக்
காட்டுகின்ற இரண்டாம் அடையாளம். (யோவான் 20:6,7 )
2. ஒவ்வொருவருக்கும்
உயிர்ப்பு
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்".
(யோவான்
11:25) என்று
கூறிய இயேசு தான் மட்டும் இறந்து உயிருக்கவில்லை மாறாக அவருடைய உயிர்ப்பில்
நமக்கும் பங்கு கொடுத்திருக்கின்றார். இதைத்
தான் பவுல் அடிகளார் "இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார்
எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்".
(1 கொரிந்தியர்
15:13) என்கின்றார். ஆக
இயேசுவின் உயிர்ப்பு நம் ஒவ்வொருவருக்கும் உயிர்ப்பு.
3. பாவங்களுக்கு
மீட்பு
இயேசுவினுடைய இந்த உயிர்ப்பு நம்
பாவங்களுக்கு மீட்பு தருகின்றது. நம்முடைய வாழ்க்கையில்
துன்பங்கள், கஷ்டங்கள், பாரங்கள், பிணி, நோய்
மற்றும் பேய் அனைத்தும் இயேசு சாவைக் கடந்து வெற்றி பெற்று உயிர்த்ததை போல, இவை
நம் வாழ்வை விட்டு மீட்கப்படுகின்றது.
4. சாட்சிய
வாழ்வின் அழைப்பு
ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவினுடைய இந்த உயிர்ப்பு நம் ஒவ்வொருவரையும் சாட்சிய வாழ்வுக்கு அழைப்பு
தருகின்றது. "மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான்
ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம்
இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்". (யோவான். 20:18) எனும்
இறை வார்த்தைகளுக்கு ஏற்ப பெண்ணின் சாட்சியத்தை பெருமையாக
ஏற்றுக்கொள்ளாத யூத சமுதாயத்தின் பெண் தான் கண்ட காட்சியை சாட்சியாக பகிர்ந்து
கொள்கின்றார். "இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு
அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச்
சாட்சிகள்". (திருத்தூதர் பணிகள். 10:41) எனும்
பேதுருவின் வார்த்தைகள் உயிர்த்த இயேசுவுக்கு அவர் சாட்சியம் பெற்றதை சுட்டிக்
காட்டுகின்றது. இவ்வாறு மகதலா மரியாவும், பேதுருவும்
மற்றும் சீடர்களும் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சி பகர்ந்தார்கள். அதைப்போல
நாம் ஒவ்வொருவரும் சாட்சி பகர இந்த பெருவிழா நமக்கு அழைப்பு தருகின்றது.
கிறிஸ்துவில்
அன்பார்ந்தவர்களே, நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்கள்
என்னும் அடையாளத்தை தாங்கி நிற்கின்றோம். இயேசுவினுடைய உயிர்ப்பை
நம்பி, இந்த
உயிர்ப்பு நமக்கு மீட்பையும், மறுவாழ்வுக்கான உயிர்ப்பையும்
தருகின்றது என ஏற்றுக்கொண்டு அவருக்கு சாட்சிய வாழ்வு வாழ்வோம். இறைவன்
நம் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பார்.
அருட்பணி குழந்தை யேசு ராஜன் CMF
கும்பகோணம்
No comments:
Post a Comment