மூவொருஇறைவனின்திருவிழா( ஆண்டு- A)
07-06-2020
ஞாயிற்றுக்கிழமை
மூவொருஇறையனுபவம்தரும்முக்கோணஉறவுமுறை
இறைவனால்படைக்கப்பட்டநம்மனிதஉடல்ஒருஅற்புதம்மற்றும்ஆச்சரியம்என்றுகூறலாம். சராசரியாகஒருமனிதனின்உடலில் 206 முதல் 208 வரைஎலும்புகள்இருக்கின்றன. 30 பில்லியன்செல்கள்மனிதஉடலில் 10 ஆயிரத்திற்கும்மேற்பட்டவேதிவினைகளைநிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. 639 தசைகள்மனிதஉடலில்இருக்கின்றன. 4 மில்லியன்வலியைஉணர்கின்றஉணரிகள்நம்முடையசதைகளில்இருக்கின்றன. 750 மில்லியன்காற்றுப்பைகள்நம்முடையநுரையீரலில்இருக்கின்றன. இன்னும் 30,000 ஜீன்கள் 90,000 புரோட்டீன்களைமனிதஉடலில்உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இதற்கும்மேலாகநம்மூளைமிகவும்அதிசயமானது. ஒருநாளைக்குகுறைந்தது 10 ஆயிரத்துக்கும்மேற்பட்டஎண்ணங்களைஉருவாக்கிக்கொண்டிருக்கின்றன.இதைத்தான்பில்பிரைசன்(Bill Bryson) எஷார்ட்ஹிஸ்டரிஆப்நியர்லிஎவ்ரிதிங்(A Short History of Nearly Everything)என்னும்ஆங்கிலபுத்தகத்தில்மனிதன்உயிர்வாழ்ந்துகொண்டிருப்பதேஅதிசயம்என்றுகூறுகின்றார். மனிதனுடையஉடலில் 6 லட்சத்து 50 ஆயிரம்மணிநேரங்கள்ட்ரில்லியன்ஆட்டோம்(Atom)செல்கள்ஒன்றுகூடிவந்துகொண்டிருக்கின்றன. இதைவைத்துதான்மனிதனுடையஆயுட்காலம் 74 வருடங்கள்என்றும் கணக்கிடுகிறார்கள்.ஆகமனிதனுடையஉடல்உறுப்புகளில்உள்ளஒவ்வொன்றையும்நாம் பார்க்கின்றபொழுதுபலவேளைகளில்நாம்புரிந்துகொள்ளமுடியாதஅளவுக்குஒருஅதிசயத்தையும், ஆச்சரியத்தையும், மனிதஉடல்உறுப்புஅமைப்புகள்நமக்குகாட்டுகின்றன. சாதாரணஒரு கடவுளுடையபடைப்பையேநம்மால்புரிந்துகொள்ளமுடியவில்லைஎன்றால்நம்மைப்படைத்தஅந்த இறைவனைஎப்படி முழுமையாகஅறிந்துகொள்ளமுடியும். மூவொருஇறைவன்என்றால்நாம் முழுமையாகபுரிந்துகொள்ளஇயலாத ஒருமறையுண்மை. அத்தகையஒரு பேருண்மையின்விழாவினைஇன்றையநாளிலேநம்முடையதாயாம்திருஅவையானதுகொண்டாடிமகிழ்கின்றது.
திருத்தந்தைஇரண்டாம்ஜான்அவர்களால்இந்ததிருவிழாஅறிவிக்கப்பட்டது. மூவொருஇறைவனின் மறையுண்மையானதுதிருஅவையின்நைசியாமற்றும்கான்ஸ்டான்டிநோபிள்திருசங்கங்களில்விலக்கிகூறப்பட்டது. தந்தை, மகன், தூயஆவிஎனமூன்றுஆட்களுக்கும்ஒரேஞானம், ஒரேசித்தம், ஒரேவல்லமை, ஒரேதேவசுபாவம் இருப்பதால்மூவரும்ஒரே இறைவன்தான்எனும்நம்விசுவாசபேருண்மையைஇன்றுநாம்திருவிழாவாககொண்டாடிமகிழ்கின்றோம். நாம்கொண்டாடுகின்றஇந்தகிறிஸ்தவவிசுவாசமறையுண்மைதான்கிறிஸ்மஸ், திருக்காட்சிபெருவிழா, பெரியவெள்ளி, ஈஸ்டர்(உயிர்ப்புபெருவிழா) எனஅனைத்துகிறிஸ்தவபெருவிழாவிற்கும்அடித்தளமாகஇருக்கிறது.
தூயசிறில்தந்தையாகியகடவுளை, முதலும்முடிவின்றி இருக்கும்கடவுளை, நாம்முழுமையாககாணஇயலாதவிண்ணில்இருக்கும்சூரியனாகவும், அவர்மகனாகியஇயேசுவைஅந்தசூரியனிலிருந்துவரும்வெளிச்சமாகவும், மற்றும்தூயஆவியானவரை சூரிய வெளிச்சத்திலிருந்துவரும்வெப்பமாக (வெதுப்பானநிலை) எனவிளக்கிக்கூறுகிறார். சூரியன், ஒளி (வெளிச்சம்) வெப்பம் எனமூன்றுசூரியன்அல்ல, மாறாகஒரேசூரியன். அதுபோலதந்தை, மகன், தூயஆவியும்மூன்றுகடவுள்அல்ல, மாறாகஒரேஇறைவன். அவரேநம்முடையவிசுவாசம்.
திருவிவிலியத்தில்மூவொருஇறைவன்( பழையஏற்பாடு )
பழையஏற்பாட்டில்மூவொருஇறைவனைப்பற்றிநேரடியாகஎந்தப்புரிதலும்தரப்படவில்லைமாறாகமறைமுகமாகவேசிலபுரிதல்கள்காணப்படுகின்றது.
பழையஏற்பாட்டில்தந்தையாகியகடவுள்
பழையஏற்பாட்டில்தந்தையாகியகடவுள் "இருக்கின்றகடவுள்" என்றுஇன்றையமுதல்வாசகத்தில்வாசிக்கின்றோம். விடுதலையைஅளிக்கும் கடவுள்என்றும்பிள்ளைகளாகியஇஸ்ராயேல்மக்களில்அன்புகொண்டிருக்கின்றஇறைவனாகவும்தந்தையாகியகடவுள்காட்டப்படுகின்றார்.(விடுதலைபயணம் 4 :22- 23 ) தந்தையாகியகடவுள்இஸ்ராயேல்மக்களை முதல் மகனாகஎன்னியதை காண்கின்றோம். (விடுதலைபயணம் 6:6-7 ) எசாயா புத்தகத்தில் 63 :16-இல்இஸ்ரயேல்மக்கள்யாவேகடவுளைதந்தைஎனஅழைப்பதைநாம்பார்க்கின்றோம்.
பழையஏற்பாட்டில்இயேசுவின்முன்நிழலிடு
ஆண்டவரின்தூதர்
இயேசுபழையஏற்பாட்டில்இயேசுஆண்டவரின்தூதர்எனஉருவகப்படுத்தப்படுகிறார். (தொடக்கநூல் 16 :7 -30 )
ஆண்டவரின்வார்த்தை
பழையஏற்பாட்டில்இறைவன்உலகைப்படைத்தபோதுஆண்டவருடையவார்த்தைஎன இயேசுஉருவகப்படுத்தப்படுகிறார். (திருப்பாடல்கள் 107:20 /தொடக்கநூல் 1:1) அதைத்தான்படைப்பின்தொடக்கத்திலேயேஇயேசுவார்த்தையாகஇருந்தார்என யோவான்நற்செய்தியில்குறிப்பிடப்படுகிறது.
ஆண்டவரின் ஞானம்
ஞானம் மனிதனாகஉருவகப்படுத்தப்படுகிறதுஅதுவேஇறைமகன்இயேசுஎனவும்பழையஏற்பாட்டில்கருதப்படுகிறது. (நீதிமொழிகள் 1:20 - 33)
பழையஏற்பாட்டில்தூயஆவி
தூயஆவியானவர்நீரின்மீதுஅசைந்தாடிக்கொண்டிருந்ததைபடைப்பின்தொடக்கத்திலேநாம்பார்க்கின்றோம். இறைவாக்கினர்எசாயாவைபேசவைத்ததும்ஆண்டவருடையஆவிதான். பழையஏற்பாட்டிலும்பலஇடங்களில்இந்ததூயஆவியின் செயல்களைநாம்மறைமுகமாகபார்க்கின்றோம்.
பழையஏற்பாட்டில்தந்தைமகன்தூயஆவியாரின்பிரசன்னம்இருந்ததைபழையஏற்பாட்டுபுத்தகங்கள்நமக்குமறைமுகமாகவிளக்குகின்றன.
புதியஏற்பாட்டில்மூவொருஇறைவன்
படைப்பின்தொடக்கத்தில்இறைவன்இவ்வுலகைப்படைத்தபோதும், மனிதனைப்படைத்தபோதும்பிரசன்னமாய்இருந்தமூவொருஇறைவன்புதியஏற்பாட்டிலும்பலஇடங்களில்தங்களுடையபிரசன்னத்தைகாட்டுவதைநாம்பார்க்கின்றோம்.
இயேசுதிருமுழுக்குப்பெற்றபோதுமூவொருஇறைவனின்பிரசன்னம்இருக்கின்றது. (மத்தேயு 3 :13) தந்தையாகியகடவுளின்குரலும், மனிதஉருவில்இயேசுதிருமுழுக்குபெறுவதும், தூயஆவிபுறாவடிவில்இறங்கிவருவதும்எனமூவொருஇறைவனின்பிரசன்னம்நம்முன்தென்படுகிறது.ஆண்டவருடையதூதர்அன்னைமரியாவுக்குமங்களவார்த்தைசொன்னபோதும், இயேசுஉருமாற்றம்பெற்றபோதும், இயேசுவினுடையஇறுதிஉரையின்போதும், இயேசுவின்வார்த்தைகளிலும்மூவொருஇறைவனுடையபிரசன்னம்புதியஏற்பாட்டிலே பலஇடங்களில்பார்க்கின்றோம். (மாற்கு 9:2-8 /யோவான் 16 :13 -25). இன்றையநற்செய்திவாசகத்தில்இயேசுநீக்கதேமுவிடம்தனக்கும்தந்தைக்கும்உள்ளஉறவைவெளிப்படுத்துவதைபார்க்கின்றோம்."தந்தையிடமிருந்துநான்வந்தேன், தந்தையிடம்திரும்பிச்செல்வேன்." "உங்களுக்காகதுணையாளராம்தூயஆவியைஅனுப்புவேன்". "தந்தைமகன்தூயஆவியின்பெயராலேதிருமுழுக்குக்கொடுங்கள்" (யோவான் 14 :16/ யோவான் 14 :11 /யோவான் 14: 16 எனஇயேசுவின்இந்தவார்த்தைகள்அனைத்துமேதமூவொருஇறைவனின்பிரசன்னத்தை நமக்குவிவிலியத்தில்காட்டுகின்றது.
ஒன்றிணைந்துவாழும்உறவுக்குஅழைக்கும் மூவொருஇறைவன்
அன்பு, மகிழ்ச்சிமற்றும்ஒற்றுமையைமுன்வைக்கும்மூவொருஇறைவனின்உறவுநமக்கும், நம்குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும்முன்மாதிரியாய்உள்ளது.
முக்கோணஉறவுமுறை
நாம்கொண்டாடுகின்றஇந்தமூவொருஇறைவனின்திருவிழாவானதுமுக்கோணஉறவுமுறைக்குநம்மைஅழைத்துச்செல்கின்றது. இந்தமூவொருஇறைவனின்அனுபவம், நம்மைமுக்கோணஉறவுமுறைக்குஅழைப்புதருகின்றது. ஒரேஞானம், ஒரேசித்தம், ஒரேவல்லமை, ஒரேதேவசுபாவத்தோடுமுக்கோணஉறவுமுறையில்ஒரேகடவுளாகவாழ்ந்துகொண்டிருக்கும்மூவொருஇறைவனின்அனுபவத்தை, நாம்நம்முடையவாழ்க்கையிலேஉணருகின்றபொழுது, நம்புகின்றபொழுது, அந்தவிசுவாசத்திலேஒவ்வொருநாளும்கிறிஸ்தவர்களாகவாழ்கின்றபொழுது, நாம்ஒவ்வொருவரும்இந்தமுக்கோணஉறவுமுறையில் வளர்வோம். இறைவன், நான், என்குடும்பம்அல்லதுசமூகம்எனும்இந்தமுக்கோணஉறவுமுறையில்நாம்ஒவ்வொருநாளும்வளரஇந்ததிருவிழாநமக்குஅழைப்புதருகின்றது. நம்குடும்பங்கள், சமூகங்கள் ஒருஇறைவனின்அனுபவத்தைப்பெற்றுஅன்பு, மகிழ்ச்சி, அமைதிமற்றும்ஒற்றுமையைபெற்றுமுக்கோணஉறவுமுறையில்நாளும்வாழஅழைப்பைபெறுகிறோம்.
இன்றுநம்முடையஉள்ளங்கள்அமைதியற்றுகிடைக்கின்றன. நம்முடையகுடும்பங்கள்சண்டைசச்சரவுகளால்பிரிந்துகிடக்கின்றன. நம்முடையசமுதாயத்தில்நாம் ஏகப்பட்டசண்டைசச்சரவுகளோடுவாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்தஅமைதியற்றஒற்றுமையற்றநிலையானதுஇன்றுமாறவேண்டுமென்றால், நாம்நமக்கும்இறைவனுக்கும், நமக்கும்நம்முடையசகோதரசகோதரிகளுக்கும், உண்டானஇந்தமுக்கோணவடிவிலானஉறவுமுறையைவளர்த்துக்கொள்ளவேண்டும். இறைவன்எவ்வாறுஒரேவல்லமை, ஒரேஞானத்தோடுஇருக்கின்றாரோ, அதுபோலநாமும்நம்முடையவாழ்க்கையில்இறைவனோடும், நம்முடையசகோதரசகோதரிகளோடும், அன்போடும், அமைதியோடும், ஒற்றுமையோடுவாழ இன்றையதிருவிழாநமக்குத்தருகின்றஅழைக்கின்றது.திருஅவையின்திருவழிபாட்டில்எல்லாஜெபங்களும், திருவருட்சாதனங்களும்தந்தைமகன்தூயஆவிஎன்னும்மூவொருஇறைவனின்பெயரால்தொடங்குகிறது. அகிலமெங்கும்ஆலயமணிகள்மூன்றுமுறைஒலிப்பதுகிறிஸ்தவர்களாகியநாம்தந்தைமகன்தூயஆவிஎன்னும்மூவொருஇறைவனிடம்ஜெபிக்கநமக்குத்தருகின்றஅழைப்பாகும்.
இந்தமூவொருஇறைவன்நமக்கும், நம்முடையகுடும்பத்திற்கும், சமூகத்திற்கும், ஒற்றுமையோடுவாழஅழைப்புதருகின்றஇறைவனாகஇருக்கின்றார். இரண்டாம்வத்திக்கான்சங்கபுத்தகத்தின்திருச்சபைஎன்னும்பகுதியில் 51ஆவதுஎண்ணில்கிறிஸ்துவில்ஒரேகுடும்பமாகஇருக்கும்நாம்அனைவரும், ஒவ்வொருவரோடும், இறைவனோடும்இணைந்துஅவரைப்புகழ்ந்துஉறவுகொள்ளும்போதுதிருச்சபையில் ஆழமானசெவிமடுக்கின்றோம்என்றுகுறிப்பிடுகின்றது. ஆகநாம் இந்தமூவொருஇறைவன்தருகின்ற அழைப்பில் திருச்சபையோடுஉறவுகொண்டுவாழஅழைப்புபெறுகின்றோம்.
"மனஒற்றுமைகொண்டிருங்கள், அமைதியுடன்வாழுங்கள், அப்போதுஅன்பும், அமைதியும்அளிக்கும்மூவொருஇறைவன்உங்களோடுஇருப்பார்என்றுஇன்றையஇரண்டாம்வாசகம்நமக்குக்அழைப்புகொடுக்கின்றது. இதுதான்மூவொருஇறைவனுடையஅழைப்பாகவும்இருக்கின்றது. எனவேமூவொருஇறைவன்தருகின்றஇந்தஉன்னதமானஅழைப்பைஏற்றுமுக்கோணஉறவுமுறையில்நாளும்வளர்ப்போம். இறைவன்ஒவ்வொருவரையும்ஆசீர்வதிப்பார்.
Fr. குழந்தையேசுராஜன் CMF
கும்பகோணம். |
||