🌱விவிலிய விதைகள்🌱
கும்பகோணம்
🌱விவிலிய விதைகள்🌱
🌱விவிலிய விதைகள்🌱
பாஸ்கா காலம் 3-ஆம் வாரம் ( ஆண்டு- B)
18-04-2021
ஞாயிற்றுக்கிழமை
உயிர்த்த இயேசு தரும் அனுபவமும் - மாற்றமும்
மனித
வாழ்க்கையில் எல்லா அனுபவங்களும், அதனால் வரும் மாற்றங்களும் ஒரு
குறிப்பிட்ட சூழலில், ஒரு மனிதரால், அவர் வார்த்தைகளால்
மற்றும் செயல்களால் நடைபெறுகிறது. இன்றைய இறைவார்த்தை பகுதியும் இயேசுவின்
இறப்புக்கு பிறகு சீடர்கள் இருந்த சூழலில், ஒரு குறிப்பிட்ட இயேசு என்னும்
மனிதருடைய காட்சியால், அவர் வாழ்த்தால், வார்த்தைகளால்
மற்றும் செயலால் சீடர்கள் பெற்ற அனுபவத்தையும், அதனால் அவர்களில் ஏற்ப்பட்ட
மாற்றத்தையும் சுட்டிக்காட்டி, நாமும் இறைவார்த்தையால் புது
அனுபவம்
பெற்று, இறைச்செயலால்
நமது வாழ்வில் புது மாற்றம் பெற அழைப்பு தருகிறது.
1. காட்சியால்)....லூக்கா.24:35a)
இயேசுவின்
காட்சிகள் அனைத்தும் சீடர்களின் வாழ்வில் மாற்றத்தையும் அனுபவத்தையும் தந்தது. அவர்
இறப்புக்கு பிறகு வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்று அறையில் முடங்கி
கிடந்தவர்கள் புதுவாழ்வு பெற்று வந்தது இயேசுவின் காட்சியால் தான். இன்று நாம் எல்லோரும் வீடியோ கால்
கலாச்சாரத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
அருகில்
இருப்பதை
போல பேசிக் கொண்டிருக்கின்றோம். என்னதான் வீடியோ கால்
கலாச்சாரத்தின் வசதியில் வாழ்ந்தாலும், ஒருவரை நேரில் சென்று சந்தித்து
பேசி, உரையாடுவது
ஒரு புது உணர்வு தான். இயேசுவினுடைய நினைப்பில், வாழ்ந்தவர்களுக்கு மற்றும்
அவருடைய எம்மாவுஸ் காட்சியை பற்றி பேசிக்கொண்டிருந்த சீடர்களுக்கு
ஒரு மாபெரும் அச்சமும், அதிர்ச்சியும் தான் இயேசுவின்
காட்சி. ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு
புது அனுபவத்தையும் மாற்றத்தையும் கொடுக்கப் போகின்றது என்பதன்
முன் அடையாளமாக இது திகழ்கின்றது.
2. வாழ்த்தால் ....( .லூக்கா24:35b)
இயேசுவின்
காட்சி "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும்
வாழ்த்தோடு துவங்குவதை பார்க்கின்றோம். இது வெறும் வாழ்த்து அல்ல, வார்த்தையும்
அல்ல மாறாக சீடர்களின் வாழ்க்கை. அன்று, அன்னை மரியாவுக்கு வானதூதர்
தோன்றிய போது "அருள் நிறைந்த மரியே வாழ்க" என
வாழ்த்தினார். அன்னைமரியாள் எலிசபெத்தை
சந்தித்த போது அவருக்கு வாழ்த்து கூறினார். வாழ்த்து என்பது உறவுகளின்
தொடக்கமாக,
சந்திப்பின் அடையாளமாக
அமைகின்றது. இயேசு மீண்டும்
சீடர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகின்ற மாற்றத்தின் அடையாளம்
தான் இந்த வாழ்த்து.
3. வார்த்தைகளால்... (லூக்கா.24:37-39)
இயேசுவினுடைய
காட்சியும் வாழ்த்தும் சீடர்களுக்கு அச்சத்தையும் கலக்கத்தையும் கொடுத்தது. தங்கள்
முன்
வந்து நின்றது
இயேசுவா? அல்லது
ஆவியா? என்ற
ஒரு கேள்வி அவர்களில் இருந்தது. இது வெறும் இயேசு தோன்றிய
காட்சியால் வந்த அச்சம் அல்ல, மாறாக அவருடைய இறப்புக்கு பிறகு
அவர்களுடைய உள்ளங்களில் பெரும் தடைக்கல்லாக இருந்த கவலைகளும், அச்சங்களும், தாக்கங்களும்
தான். இவை அனைத்தும் இயேசுவினுடைய
வார்த்தைகளால் மாற்றம் பெறுகின்றன. இயேசுவினுடைய வார்த்தைகள்
அவர்களுடைய அச்சத்தின் தீர்வாக, மருந்தாக மற்றும் விளக்கமாக
மாறுகின்றது. 'நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்,' 'தொட்டுப்
பாருங்கள்'
எனும்
இயேசுவின் வார்த்தைகள் சீடர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை எனும் இரண்டு
உன்னதமான உணர்வுகளை உருவாக்கி தருகின்றது. இதுவே
அவர்களுக்கு இறை அனுபவத்தை தருகின்றது.
4. செயல்களால்...(லூக்கா.24:41-43)
மகிழ்ச்சி
மற்றும் நம்பிக்கை என்னும் உணர்வுகளோடு கலந்து வியப்பு என்னும் மற்றொரு உணர்வும்
அவர்களில் உருவாகுவதை இயேசு கவனிக்கிறார். அதனால்
தான் வார்த்தையால் மாற்றத்தை ஏற்படுத்திய இயேசு, தொடர்ந்து செயலால் மாற்றத்தை
ஏற்படுத்த முயலுகின்றார். 'உண்பதற்கு இங்கே உங்களிடம்
ஏதேனும் உண்டா?'
என்று
வினவி வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர் அவர்கள்முன் அமர்ந்து உண்பதை இறைவார்த்தை
எடுத்துரைக்கின்றது. இயேசுவின் மனிதத்தன்மையை இது
எடுத்துரைத்து உங்களோடு வாழ்ந்த இறைமகன் நானே என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
5. மறைநூலால்....(லூக்கா.24:44)
இயேசு
தனது காட்சியால், வாழ்த்தால், வார்த்தைகளால்
மற்றும் செயல்களால் இறையனுபவத்தையும், மாற்றத்தையும் சீடர்களுள்
ஏற்படுத்த விரும்பினார். அதனோடு மீண்டுமாக சீடர்கள்
நம்பிய மறைநூல் வார்த்தைகளால் அவர்களுக்கு இவையனைத்தும் இறைவனின் சித்தம்
என்பதையும்,
மோசேயின்
சட்டமும்,
இறைவாக்கினர்
நூல்களும் இதைத்தான் குறிப்பிடுகின்றது என்பதையும், மேலும் இயேசுவின் பாடுகள், இறப்பு
மற்றும் உயிர்ப்பு இறைவனுடைய சித்தம், இதற்கு
நீங்களே சாட்சிகள் என்னும் புது அழைப்பை அவர்களுக்கு தருகின்றார்.
சீடர்களின்
அனுபவமும்/மாற்றமும்:-
இயேசுவின்
பிரசன்னமும்,
வார்த்தையும் மற்றும்
செயலும் தந்த மாற்றத்தை மற்றும் இறையனுபவத்தை தான் இன்றைய முதல் மற்றும் இரண்டாம்
வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றது. பேதுரு
இயேசுவை பறைசாற்றி அவருக்கு சாட்சியம் பகிர்வதை இன்றைய முதல் வாசகமும், யோவான்
இயேசுவுக்கு சாட்சியமாக பகர்ந்து, அனைவரும் பாவத்தை விட்டு
மனமாற்றம் பெற்றவர்களாக வாழ அழைப்பு தருவது இன்றைய
இரண்டாம் வாசகமாக இருக்கின்றது. இந்த வார்த்தைகளே அவர்கள் கண்ட
இறையனுபவத்தின் விழுமியங்கள், அவர்கள் பெற்ற மாற்றத்தின்
சாட்சியங்கள் ஆகும். இன்றைய நற்செய்தியின்
இறுதிப்பகுதியிலும் 'அவர்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டது' (லூக்கா.24:45) என
குறிப்பிடப்பட்டிருப்பது சீடர்களின் இறையனுபவமாக இருக்கின்றது.
இன்று
நமது வாழ்க்கையிலும் நாம் இயேசுவின் வார்த்தைகளை மற்றும் அவர் செயல்களை ஒவ்வொரு
நாளும் கேட்கின்றோம், வாசிக்கின்றோம் மற்றும்
தியானிக்கிறோம். இயேசுவின் செயல்களும் மற்றும்
வார்த்தைகளும்
நமது வாழ்க்கையில் இறையனுபவத்தை தருகின்றனதா? புதுமாற்றத்தை ஏற்படுத்துகின்றதா? சிந்திப்போம்...
மாற்றம்
பெறுவோம்...
அருட்பணி.
குழந்தை
யேசு
ராஜன்
CMF
கும்பகோணம்